வீட்டில் எளிதில் சமைக்க கூடிய முட்டை பிரைட் ரைஸ் | Egg Fried Rice Recipe !

#Cooking #Egg #rice
வீட்டில் எளிதில் சமைக்க கூடிய முட்டை பிரைட் ரைஸ் | Egg Fried Rice Recipe !

தேவையான பொருட்கள் :

  • பாசுமதி அரிசி – 1 கப்
  • வெங்காயம் – 2
  • கேரட் – 1
  • பீன்ஸ் – 50 கிராம்
  • பச்சை பட்டாணி – 1 /2 கப்
  • வெங்காயத்தாள் – 1
  • குடை மிளகாய் – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
  • முட்டை – 3
  • சில்லி சாஸ் – 1 மேஜை கரண்டி
  • சோயா சாஸ் – 1 மேசைக் கரண்டி
  • மிளகு தூள் -1 மேஜை கரண்டி
  • நெய் – 1/4 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  1. வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
  2. சாதம் உதிர் உதிரக வடித்து ஆற வைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து பொரித்து கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  4. அடுத்து அதில் பாதி வெங்காயத் தாளை சேர்த்து வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 
  5. அதன் பின் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து கலர் மாறாமல் வதக்கவும். அடுத்து அதில் குடை மிளகாயை போட்டு வதக்கவும்.
  6. அனைத்து வெந்ததும் அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் மூடி வைத்து வேக வைக்கவும். 
  7. காய்கறி நன்றாக வெந்த பின் ஆற வைத்த சோறு, பொரித்த முட்டை சேர்த்து நன்றாக கிண்டி இறக்கவும். முட்டை ப்ரைடு ரைஸ் ரெடி.
     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4